- எங்களுக்கு
- இந்தியா
- நியூயார்க்
- சகேத் ஸ்ரீனிவாசயா
- கர்நாடக
- ஐஐடி சென்னை
- கலிபோர்னியா பல்கலைக்கழகம்
- பெர்க்லி…
நியூயார்க்: அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சகேத் ஸ்ரீனிவாசய்யா(22). சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த இவர், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு கலிஃபோர்னியாவின் பெர்க்லே பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் பிரிவில் முதுகலை அறிவியல் படித்து வந்தார். இந்நிலையில் சாகேத் ஸ்ரீனிவாசய்யா கடந்த 10ம் தேதி முதல் மாயமாகி உள்ளார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சான்பிரான்சிஸ்கோ காவல்துறையினர் மாயமான இந்திய மாணவர் சகேத் ஸ்ரீனிவாசய்யாவை தேடி வந்தனர். ப்போது பார்க் ஹில்ஸ் என்ற இடத்தில் சாகேத் ஸ்ரீனிவாசய்யாவின் லேப்டாப், பாஸ்போர்ட் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள அன்சா ஏரியில் மாணவனின் உடலை தேடிய நிலையில், மாணவன் சாகேத் ஸ்ரீனிவாசய்யா உடல் சடலமாக சனிக்கிழமையன்று மீட்கப்பட்டது. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத்தூதரகம் மற்றும் உள்ளூர் காவல்துறை சாகேத் ஸ்ரீனிவாசய்யாவின் உடல் மீட்கப்பட்டதை உறுதி செய்துள்ளன.
