×

அதிகாரி இடமாற்ற சர்ச்சை; முதல்வர் சித்தராமையா கையெழுத்து உண்மையா..? தடயவியல் சோதனை நடத்த பாஜ கோரிக்கை

பெங்களூரு: கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தின் முத்திரையுடன் கூடிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. முதல்வர் சித்தராமையா கையெழுத்துடன் இருந்த அந்த கடிதத்தில் மாண்டியா மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் மைசூரு கலால் துறை துணை ஆணையராக நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், இது போன்ற போலி ஆவணங்களை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா போலீசுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விதானசவுதா போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கார்க்கலா தொகுதி பாஜ சட்டமன்ற உறுப்பினர் வி.சுனில் குமார் நேற்று புதிய புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். முதலமைச்சர் அலுவலகத்திலேயே கடிதத்தாள் மோசடி கும்பல் ஒன்று செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சரின் கையெழுத்து ஒரிஜினல் தானா? அல்லது போலியா? என்பது குறித்து தடய அறிவியல் சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags : Chief Minister ,Siddaramaiah ,BJP ,Bengaluru ,Karnataka Chief Minister's Office ,Mandya ,Mysore Excise Department ,
× RELATED லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கைவரிசை; ரூ.10...