×

துணை ஜனாதிபதி, பிரதமர் மகாசிவராத்திரி வாழ்த்து

புதுடெல்லி: மகாசிவராத்திரி விழா இந்து பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சிவன் கோயில்களில் நான்குகால சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த சிவராத்திரி விழா இன்று அதிகாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் பக்தர்கள் அனைவருக்கும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மகாசிவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தன் எக்ஸ் பதிவில், “காசி முதல் ராமேஸ்வரம் வரை இந்த புனித திருவிழா இந்தியாவின் நித்திய மற்றும் சிதைக்கப்படாத ஆன்மீக பாரம்பரியத்தின் வாழும் அடையாளமாக உள்ளது. மகாதேவ் மற்றும் அன்னை பார்வதியின் ஆசீர்வாதம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “ஆதிதேவ் மகாதேவ் அனைவருக்கும் தொடர்ந்து தனது ஆசீர்வாதங்களை அருள வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அவரது ஆசிகள் அனைவருக்கும் செழிப்பை கொண்டு வரட்டும். நம் நாடு செழிப்பின் உச்சத்தை அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Vice President ,Mahashivratri ,New Delhi ,Shiva ,Shivaratri ,C.P. Radhakrishnan ,Modi ,
× RELATED லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கைவரிசை; ரூ.10...