- சௌமியா செர்ட்டிபிகேட்
- ஓமலூர்
- தமிழ் பெண்கள் உரிமைகள் மீட்பு பயணக்
- PAMAKA
- ஓமலூர், சேலம் மாவட்டம்
- பசுமை தாயகம்
- ஜனாதிபதி
- Saumia
- மேட்டூர்
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் பாமக சார்பில், தமிழக மகளிர் உரிமை மீட்பு பயண கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா பேசியதாவது: மேட்டூர் அணை காவிரி உபரிநீரை சேமித்தால் மாவட்டம் முழுவதும் விவசாயம் செய்ய முடியும். சரபங்கா ஆற்றில் தடுப்பணை மற்றும் காவிரி உபரிநீர் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். சேலம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. ஓமலூர் தொகுதியில் பூ விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆனால், அதனை சேமிக்க, விற்க சேமிப்பு கிடங்கோ, விற்பனை மையமோ, செண்ட் தொழிற்சாலையோ இல்லை. இங்கு உற்பத்தியாகும் வெல்லத்தை விற்க மண்டி வசதி இல்லை. ஓமலூர் மஞ்சள் மிகவும் பிரபலமானது என்பதால், கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
பெண் பிள்ளைகளை எப்படி ஒழுக்கத்துடன் வளர்க்கிறோமா, அதேபோல ஆண் பிள்ளைகளையும் ஒழுக்கத்துடன் வளர்க்கவேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு போதை பழக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர் சமுதாயம் மிகப்பெரிய பாதிப்பில் உள்ளது. இப்படி இருந்தால், நம் பெண் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல மாப்பிள்ளை பார்ப்பது? நீங்கள் எல்லாம் ஒழுக்கமானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அன்புமணி மிகவும் ஒழுக்கமானவர். அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு சவுமியா அன்புமணி பேசினார்.
