×

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் 28.12.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் தொடர்பாக இலங்கையின் யாழ்ப்பாணம் நீதிமன்றம் 3.2.2026 அன்று வழங்கிய தீர்ப்பு குறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று மீனவ படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 9 மீனவர்களும் 5.2.2026 அன்று மிரிஹானா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும், தாயகம் திரும்புவதில் உள்ள நடைமுறை தாமதம் காரணமாக அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நம்நாட்டு மீனவர்கள் அங்கு சந்திக்கும் கடினமான சூழ்நிலையையும், மீனவர்களின் குடும்பங்கள் இங்கு எதிர்கொள்ளும் துயரங்களையும் கருத்தில் கொண்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் திரும்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : SRI LANKAN COURT ,PRIME ,MINISTER ,K. Stalin ,Chennai ,Chief Minister of Foreign Affairs of the Union ,Minister of Foreign Affairs of the Union ,Chief Minister of Tamil Nadu ,MLA ,Minister of State for the Union ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்: பாமக தலைவர் அன்புமணி