அண்ணாவின் 52வது நினைவு தினம் திமுக, அதிமுக அமைதி ஊர்வலம்

தஞ்சை, பிப்.4: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 52வது நினைவுநாளையொட்டி தஞ்சை மாநகர திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் திக, அதிமுகவினர் அமைதி ஊர்வலம் நடத்தி அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். பேரறிஞர் அண்ணா 52வது நினைவு நாளையொட்டி தஞ்சை மாநகர திமுக சார்பில் தஞ்சையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு திமுக தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம், சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், நகர அவைத் தலைவர் ஆறுமுகம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அருளானந்தசாமி, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் உலகநாதன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முரசொலி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், நிர்வாகிகள் ஜித்து, எல்.ஜி.அண்ணா, சண்.ராமநாதன், அஞ்சுகம் பூபதி, இறை.கார்குழலி, உஷா புண்ணியமூர்த்தி, வைஜெயந்திமாலா கேசவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தி.க.சார்பில் துணை பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலை மையில் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர். அதிமுக: அதிமுக சார்பில் தஞ்சை திலகர் திடலிலிருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு முன்னாள் எம்.பி. பரசுராமன் தலைமை யில் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகர, ஒன்றிய திமுக சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியன்தலைமையில் அழகிரி சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு  மாலை அணிவித்தனர். கும்பகோணத்தில் அதிமுக, திமுக சார்பில் அண்ணா 52வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் நடந்தது.

கும்பகோணம்: கும்பகோணம் நகர திமுக சார்பில் சாரங்கபாணி கோயில் தெற்கு வீதியில் உள்ள  கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மகாமகம் குளக்கரையில் உள்ள  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை  வகித்தார். எம்எல்ஏ அன்பழகன், நகர, ஒன்றிய செயலாளர்கள் தமிழழகன், கணேசன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். கும்பகோணம் காந்தி பூங்காவிலிருந்து அதிமுக நகர செயலாளர் ராமநாதன் தலைமையில் ஊர்வலமாக பிரம்மன் கோவில் வழிநடப்பை சென்றடைந்தனர். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல் அமமுக சார்பில் கும்பகோணம் பெரிய தெருவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேராவூரணி: பேராவூரணியில் திமுக ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் தலைமையில்  வேதாந்தம் திடலில் இருந்து பேரணி தொடங்கி அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது. அங்கு  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாபநாசம்: பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அண்ணாவின்சிலைக்கு திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினர் மாலையணிவித்தனர். இதேபோல் கபிஸ்தலத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தார்.

இதேபோல் அதிமுக சார்பில் அண்ணாவின் உருவ படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராம்குமார் உள்பட கட்சியினர் மாலை அணிவித்தனர். ஒரத்தநாடு: ஒரத்தநாட்டிலுள்ள அண்ணா சிலைக்கு, திமுக சார்பில் எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மகேஷ்கிருஷ்ணசாமி  உள்பட  பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், தனபால் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அமமுக: அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: