×

ஆட்சியில் பங்கு என்று நான் கண்டிஷன் போடவில்லை: சொல்கிறார் டிடிவி

திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. ஆட்சியில் பங்கு வேண்டும் என நான் கண்டிஷன் போடவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதை குறித்து கேட்டனர். அதற்கு அவர், ‘தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்’ என்றார்.

எங்கள் கூட்டணியில் சுமுகமான முறையில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு கவுரமாக வழங்கப்படும். அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நாங்கள் கண்டிஷன் போடவில்லை. எங்களைச் சேர்ந்தவர்களை அமைச்சராக வேண்டும் என்பது எனது விருப்பம் தான் என்று சொன்னேன். ஆசை என்று சொன்னேனே தவிர நோ கண்டிஷன்ஸ்’ என்றார். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

Tags : DTV ,Thirupparangundaram ,Tamil Nadu ,AMUKA ,GENERAL SECRETARY ,DINAKARAN ,Madura ,Secretary General ,Ammuka ,D. D. V. Thinakaran ,
× RELATED திருச்சியில் அமித்ஷா: மேலும் சிலரை...