- Amitsha
- எடப்பாடி பழனிசாமி கட்பு
- திருச்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆதிமுகா
- பஹ்ஜா
- Bamaka
- அன்புமணி
- Tamaga
- Amamuka
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
திருச்சி: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக(அன்புமணி) தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, தனித்தே ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறார். ஆனால் கூட்டணி உறுதியான போது, அமித்ஷா, கூட்டணி ஆட்சி என்றார். அன்புமணி மற்றும் தமிழக பாஜ தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். அதிமுக தலைமையில் கூட்டணி இருந்தாலும், கூட்டணி விவகாரத்தை எல்லாம் டெல்லி பாஜக தலைமை தான் மேற்கொண்டு வருகிறது. கூட்டணிக்குள் யார் வர வேண்டும், வர வேண்டாம் என்பதையும் அமித் ஷா தான் முடிவு செய்கிறார்.
திருச்சிக்கு சமீபத்தில் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் வந்து அமித் ஷாவை சந்தித்தார். இதன்பிறகு தான் அமமுக, பாமகவுடன் கூட்டணி உருவானது. இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மீண்டும் திருச்சி வருகிறார். இரவு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளையும் இங்கேயே இருக்கிறார். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பாஜ தலைவர்களுடன் இன்றிரவு அல்லது நாளை அமித்ஷா ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் மேலும் சில கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாம். வரும் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் புதிதாக கூட்டணியில் இணைய உள்ள கட்சிகளின் தலைவர்கள் மேடை ஏறுவார்கள் என கூறப்படுகிறது. அமித் ஷாவின் இந்த செயல்பாடு, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி சென்டிமென்ட்
அமித்ஷா காரைக்காலில், ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்ள தான் திருச்சி வருகிறார். எனவே அவர் காரைக்காலிலேயே தங்கலாம். ஆனால் திருச்சியில் 2 நாள் தங்குகிறார். இங்கிருந்து தான் காரைக்கால் சென்று வருகிறார். கடந்த முறை திருச்சியில் இருந்த போது தான், பேச்சுவார்த்தை மூலம் அமமுக, பாமகவுடன் கூட்டணி உறுதியானது. எனவே திருச்சியை ராசியான ஊராக அமித்ஷா நினைக்கிறாராம். அதனால் தான், இந்த முறையும் திருச்சியிலேயே தங்கி மேலும் சில கட்சிகளின் தலைவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளாராம்.
