×

தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்களாக நடைபோட துணை நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

சென்னை: தமிழ்நாட்டு மகளிர், வெல்லும் தமிழ் பெண்களாக நடைபோட என்றும் துணை நிற்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. சட்டமன்ற தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை’ தடுக்க பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று (நேற்று) காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், திராவிட மாடல் 2.0-ல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்கள் ஆக நடைபோட என்றும் துணை நிற்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,
× RELATED திருவண்ணாமலை: இடிபாடுகளில் சிக்கி...