கும்பகோணம், பிப்.13: கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் கலைஞர் காலனி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி புதிய மற்றும் பழைய தொட்டிகளின் குழாய்களை புதிதாக பதிக்கப்பட்டுள்ள குழாயுடன் ‘இண்டர் லிங்க்’ பணிகள் இன்று நடைபெற உள்ளதால், வார்டு எண் 31, 32, 33, 34 மற்றும் 35 ஆகிய வார்டு பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என தெரிவித்து கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரினை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
