×

கும்பகோணத்தில் கடும் பனிமூட்டம்

கும்பகோணம், பிப்.13: கும்பகோணத்தில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மூடு பனியும் நிலவுகிறது.

 

Tags : Kumbakonam ,Tamil Nadu ,
× RELATED வறண்டு வரும் கோமுகி அணை விவசாயிகள் வேதனை