×

புதுக்கோட்டை விராலிமலை அருகே சாலை விபத்து தொழிலாளி பலி

விராலிமலை,பிப்.13: விராலிமலை தாலுகா காக்கா குடியைச் சேர்ந்தவர் முத்தன் மகன் பன்னீர்செல்வம்(45). கூலித்தொழிலாளியான இவர் நேற்று சொந்த வேலை காரணமாக தனது மொபட்டில் (ஸ்கூட்டி) வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.விராலிமலை அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விராலூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அதில் பன்னீர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீசார் பன்னீர் செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Pudukkottai Viralimalai ,Viraalimalai ,Paneer Selvam ,Taluga ,Gaka ,Scooty ,Madurai-Trichy National Highway ,Viralur ,
× RELATED வறண்டு வரும் கோமுகி அணை விவசாயிகள் வேதனை