புதுக்கோட்டை, பிப்.13: புதுக்கோட்டை செல்லப்பா நகரில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய நியாய விலை கடை திறப்பு. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லப்பா நகரில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நியாய விலை கடை கட்டப்பட்டு அந்த கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கடையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு நியாய விலை கடையில் வழங்கும் பொருட்களை வழங்கி இனிப்புகள் கொடு த்து கொண்டாடினர்.
மேலும் இந்த நியாய விலை கடைக்கு முன்பு ஒன்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு சொந்த செலவில் நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க ஹாஸ்பிடாஸ் செட் அமைத்து கொடுத்துள்ளது வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இது போல் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அமைத்து தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி க்கை எழுந்துள்ளது.
