- ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி
- கிருஷ்ணராயபுரம்
- சட்டமன்ற உறுப்பினர்
- சிவகமசுந்தரி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
கிருஷ்ணராயபுரம், பிப். 10: பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, காலை உணவு வழங்கினார்.
