×

கரூர் மாநகராட்சியில் ரூ.13.63 கோடியில் 35 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்

 

கரூர். பிப். 10: கரூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 13.63 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளை கரூர் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மட்டும் கரூர் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமா வி.செந்தில் பாலாஜி கடந்த நாலரை ஆண்டுகளில் ரூபாய் 1500 கோடி மதிப்பிற்கு மேல் பல்வேறு திட்டப் பணியில் நிறைவு செய்துள்ளார்.

இதன் அடுத்த பகுதியாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 13.63 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளை தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் கே.எம்.சுதா, மாவட்ட வருவாய் அதிகாரி விமல் ராஜ், கோட்டாட்சியர் முகமது பைசல், மாநகராட்சி பொறியாளர் சுந்தர்ராஜன், மண்டல தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ஆர்.எஸ்.ராஜா, அன்பரசன், வெங்கமேடு சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

Tags : Karur Corporation ,Karur ,Karur District Corporation ,Senthil Balaji MLA ,MLA ,Senthil… ,
× RELATED கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் கைது