×

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்தார். இன்று முதல் தினமும் கணபதிஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இன்று முதல் 17ம் தேதி வரை தினமும் காலையில் பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தலாம். வரும் 17ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். நேற்று முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

Tags : Sabarimala ,Masi month ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,Melshanthi Prasad Namboothiri ,Thantri Kandara ,Mahesh Mohanar ,
× RELATED மாநிலங்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர்...