×

எந்தவொரு திட்டத்திற்கும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி:மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: அதிக தனிநபர் வருமான வரி வசூல் என்பது நாட்டில் நடுத்தர வர்க்கத்தினர் ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது நசுக்கப்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல. ஏழ்மை ஒழிக்கப்பட்டு, நடுத்தர வர்க்கம் விரிவடைந்து வருவதற்கான சான்றுகளே உள்ளன. பல நலத்திட்டங்களில் செலவினங்களைக் குறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஒன்றிய அரசின் எந்தவொரு திட்டத்திற்கும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கவோ அல்லது நிறுத்தவோ இல்லை. ஒன்றிய அரசின் நிதி இலவசமல்ல, இஷ்டத்திற்கு செய்வதற்கு. அது மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம். பட்ஜெட் கடந்த காலங்களை ஒருபோதும் மறக்காது. அது இரட்டை இலக்க பணவீக்கம் இருந்த பலவீனமான நாட்களை எப்போதும் நினைவில் கொள்கிறது.இவ்வாறு பேசினார்.

Tags : Nirmala Sitharaman ,New Delhi ,Rajya ,Sabha ,Finance Minister ,
× RELATED மாநிலங்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர்...