×

ரியஸ் எஸ்டேட் அதிபர் கொலை கர்நாடக பாஜ எம்எல்ஏ கைது

பெங்களூரு: பெங்களூரு பாரதிநகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்தாண்டு ஜூலை மாதம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுப்பட்டிருந்த சிவபிரகாஷ் (எ) பிக்லுசிவா என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக சிவபிரகாஷின் தாய் விஜயலட்சுமி முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணராஜபுரம் தொகுதி பாஜ எம்எல்ஏவுமான பைரதி பசவராஜ் தூண்டுதல் பேரில் நடந்ததாக கூறியிருந்தார். இதையடுத்து பாஜ எம்எல்ஏ பைரதி பசவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரது ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு வந்த பாஜ எம்எல்ஏ பசவராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags : Karnataka BJP ,MLA ,Rius Estate ,Bengaluru ,Sivaprakash (A) Biklusiva ,Bharathinagar ,Sivaprakash’s… ,
× RELATED மாநிலங்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர்...