×

சபரிமலையில் படப்பிடிப்பு டைரக்டரிடம் விசாரணை

திருவனந்தபுரம்: மலையாள இயக்குனர் அனுராஜ் மனோகர் ஒரு புதிய மலையாளப் படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படத்திற்காக சபரிமலை சன்னிதானத்தில் வைத்து மகரவிளக்கு பூஜை தினத்தன்று சில காட்சிகளை எடுக்க அவர் அனுமதி கேட்டிருந்தார். அதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி மறுத்தது. ஆனாலும் அனுராஜ் மனோகர் சபரிமலை சன்னிதானத்தில் வைத்து படப்பிடிப்பை நடத்தினார். இதைத்தொடர்ந்து இவர் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் விசாரணைக்காக பிலாப்பள்ளி வன காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுராஜ் மனோகருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதன்படி டைரக்டர் அனுராஜ் மனோகர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக அபராதத்தை கட்டத் தயார் என்றும் அவர் கூறினார். சுமார் 2 மணி நேரம் வனத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Anuraj Manohar ,Travancore Devaswom Board… ,
× RELATED மாநிலங்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர்...