AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், Wipro, TCS, Infosys, L&T போன்ற இந்திய IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி!!

மும்பை :இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை NIFTY IT பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 5% சரிவடைந்துள்ளன. ஐ.டி. துறையில் ஏ.ஐ. சில மாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் என ஆந்திரோபிக் நிறுவனம் அறிவித்ததால் பங்குகள் இவ்வாறு வீழ்ச்சி கண்டுள்ளது. AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், Wipro, TCS, Infosys, L&T போன்ற இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்போசிஸ் பங்குகள் விலை ரூ.1,471 லிருந்து ரூ.1,395ஆக சரிந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS பங்குகள் இன்று 4.8% சரிந்து 2,766.00 ரூபாய் என்ற 52 வார குறைந்த விலையைத் தொட்டது. மேலும், அதன் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை அளவில் இருந்து கீழே சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் புதிய கிளாவுட் AI-ன் அறிமுகத்தால், IT நிறுவனங்கள் கதிகலங்கிப் போயுள்ளன. இந்நிறுவனங்களின் Outsourcing சேவைகளை இந்த Al Chatbot-கள் மிகத் துல்லியமாகச் செய்து முடித்து, அதை நேரத்திற்குத் தகுந்தவாறு மேம்படுத்திக் கொள்வதால் மனிதர்கள் தலையீடு தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: