- அண்ணா பல்கலைக்கழகம்
- சென்னை
- வைதர்மம்
- மின்னணுவியல் மற்றும் தொடர்பாடல் பொறியியல் திணைக்களம்
- கிண்டி பொறியியல் கல்லூரி
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பாக ‘வைதர்மா’ என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆய்வகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான உயர் செயல்திறன் கொண்ட கணினி கட்டமைப்புகளைக் கொண்டு இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்கொடையை 1990ம் ஆண்டு இசிஇ பிரிவில் பயின்ற முன்னாள் மாணவரும், கார்சன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமான சுந்தர் வைத்தியநாதன் வழங்கியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரக் கற்றல் (எம்எல்), ரோபாட்டிக்ஸ் மற்றும் தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) ஆகிய வளர்ந்து வரும் துறைகளில் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இவ்விழாவில் கிண்டி வாளாக கல்லூரி டீன் ஹரிஹரன் வரவேற்புரையாற்றினார். தலைமையுரை ஆற்றிய அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் குமரேசன் கூறுகையில், ‘தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான இத்தகைய பிணைப்பு மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம்,’ என்றார்.
