×

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி வரை 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: இன்றும் ஆய்வு தொடரும்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ. நீளமுள்ள உயர்மட்ட வழித்தடத்தில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி அவருடைய குழுவினருடன் நேற்று முதற்கட்ட ஆய்வைத் தொடங்கினார். ஆய்வு, இன்றும் நடைபெறுகிறது. பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ, பூந்தமல்லி மெட்ரோ, முல்லைத்தோட்டம் மெட்ரோ, கரையான்சாவடி மெட்ரோ, குமணன்சாவடி மெட்ரோ, காட்டுப்பாக்கம் மெட்ரோ, அய்யப்பன்தாங்கல் மெட்ரோ, தெள்ளியாரகரம் மெட்ரோ, போரூர் புறவழிச்சாலை மெட்ரோ, போரூர் சந்திப்பு மெட்ரோ, வடபழனி மெட்ரோ வரை 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் அர்ச்சுனன் (திட்டங்கள்), மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Tags : Poonamallee Bypass ,Vadapalani ,Chennai ,Route 4 ,Metro Rail ,Safety Commissioner ,Anant Madhukar Chowdhury ,
× RELATED கல்வி நிறுவனப் பாகுபாடுகளுக்கு...