×

பழம் நீ

பழநி மலை முருகனை, பழ ‘ம்’ நீ எனும் உள்மொழியால் உலகம் அறியுமாறு செய்வதற்காக, ‘‘பழம் நீ’’ என பழநி மலையில் முருகனைப் பார்த்து சிவபெருமாள் சொல்கிறார். பழநி மலையில் தனித்து நின்ற குமரனைப் பார்த்து, ‘பழம் நீ’ என சிவபெருமாள் கூறியது, பழமையான ‘ம்’ நீ எனும் உட்பொருள் தருகிறது. ‘வாயால் பேசரிய மறைஞான பிள்ளை பழம் நீ’ என்கிறார் சிவபெருமாள். வாயால் பேசரிய மறையாக உள்மொழி காட்சி தருகிறது.

முருகப் பெருமாளை ‘ம்’ எனும் மெய்யுணர்வின் வடிவமாகக் காட்டுகிறது. பழ ‘ம்’ நீ எனும் உள்மொழி.பழ ‘ம்’ நீ எனும் உட்பொருள் தரும் பழம் நீ என முருகனை நோக்கி சொல்வதற்காகத்தான், பழத்தை வைத்து திருவிளையாடல் புரிந்துள்ளார் சிவபெருமாள். பழம் காபட்டி, சிவபெருமாள் நிகழ்த்திய திருவிளையாடலில் நோக்கம், பழம் நீ எனும் சொற்களை பழநி மலையில் முருகனுக்கு சூட்டும்போது நிறைவு பெறுகிறது. பழ ‘ம்’ எனும் உள்மொழி காட்டும் பழம் எனும் சொல்லுக்கு உரியவன் முருகன்; பழம் எனும் கனி வடிவம் உருவ எழுத்திற்கு உரியவன் ஆனைமுகன் எனும் உண்மையை சிவனின் திருவிளையாடல் கூறுகிறது. பழம் நீ என்பது பழ (ம்) நீ, பழநீ, பழநி என்றானதாகச் சொல்வர்.

‘முருகன் தனிவேல் முனி நம் குரு’ என்று கந்தரநுபூதியில், ஒப்பில்லாத வேல் ஏந்திய முனி வடிவ முருகனை குருவாகக் காண்கிறோம் அருணகிரிநாதர். ‘கெடா ஓர் கனியே, குமார முனியே’ என எழிலார் சுரும்பு பாடலில் முருகனை முனி வடிவமாகப் போற்றுகிறார் பாம்பன் சுவாமிகள்.

காவியும் கண்டமாலையும்

பழநி மலையில் உடல் எனும் வடிவினில் மெய்யுணர்வை வைத்துவிட்டு, அவ்வுடல் வடிவினை இடம் என்ற கருத்தில் மட்டும் பார்க்க வேண்டும் என தத்துவம் பேசுகிறோம். பழநி மலையில் இறைவனின் ஆண்டியின் கோலத்தை தரிசனம் செய்யும்போது, இறைவனின் திருமேனியை இடமாகக் கொண்டு தரிசனம் தரும் ‘காவியும் கண்டமாலையும்’ ஆகிய இரு உருவ எழுத்துகளைக் காண்கிறோம்.

சொற்களின் மெய்ப் பொருளறிவதில், கயிலாயத்தில் தனித்து நின்ற முருகப் பெருமாள், காவி எனும் பெயர் சூடிய கலிங்கமும் (ஆடையும்), மணி மாலை எனும் கண்ட (கழுத்து) மாலையும் தரிசனம் தரும் இடமாக, தன் திருமேனியை ஆண்டியின் கோலத்தில் பழநி மலையில் காட்டுகிறான்.

உடலை இடமாகப் பற்றியிருக்கும் காவியின் உள்மொழி, க ஆவி ஆகும். க (முதன்மையான) ஆவி (உயிர்) எனும் உள்மொழியில் தோன்றிய உருவ எழுத்து, காளி ஆகும். இங்கு க என்பது, அடைமொழியாகும். ‘ஊனைக் குறித்த உயிரெல்லாம்’ என்பது வள்ளுவம். உடலை இடமாகக் கொண்ட உயிரைத்தான் பார்க்க முடிகிறது. உடலை இடமாகப் பற்றியிருக்கும் உயிர் எனும் ஆவியை, காவி எனும் உருவ எழுத்து வடிவில் பழநி மலையில் தரிசனம் செய்கிறோம்.

நாகலட்சுமி

Tags : Lord ,Murugan ,Lord Shiva ,Palani Hill ,Kumaran ,
× RELATED சம்சார சாகரத்தை தாண்டுவிக்கும் நாமம்