×

தேதி, கிழமை தெரியாத சவுமியா

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரில் நேற்று பாமக (அன்புமணி பிரிவு) சார்பில், தமிழக மகளிர் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் நடை பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது:
சட்டமன்ற தேர்தலுக்கு நல்ல கூட்டணி அமைந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்து மருத்துவர் அன்புமணி பின்னால் இருக்க வேண்டும் என்றார். முன்னதாக பேச்சை தொடங்கும்போது, கூட்டத்தை பார்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை. நாளை நீங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றார். அதனை கேட்டு திடுக்கிட்ட நிர்வாகிகள் இன்று திங்கட்கிழமை என சுட்டிக்காட்டினர்.

Tags : Soumia ,Mattur ,Tamil Nadu Women's Rights Recovery Travel General Meeting ,Pamaka ,Anbumani Division ,Matur, Salem district ,Greens ,President ,Saumiya Anbumani ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட...