வேலூர்: தேர்தல் ஆணையம் கெடுபிடியால் சுவர் எழுத்து விளம்பரங்கள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகின்றன. இந்நிலையில், 2026 ஏப்ரல் வரைதான் தவெக இருக்கும், அதாவது தேர்தல் வரைதான் தவெக இருக்கும் என்பதுபோல் சுவரில் இடம் பிடித்து வைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு சுவர்களில் கட்சி சார்பில் வேட்பாளர் பெயர், சின்னம் மற்றும் தேர்தல் நடைபெறும் தேதி இடம் பெறும். ஆனால், வேலூரில் சுவர் விளம்பரங்களில் தவெக கட்சியினர் ‘2026 ஏப்ரல் வரை’ என எழுதி வைத்துள்ளனர். அதனருகே விஜயின் உருவம் வரைப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கு பிறகு, தவெக கட்சியும், விஜயும் களத்தில் இருக்கமாட்டாங்கன்னு பொதுமக்கள், பிற அரசியல் கட்சியினர் ெசால்வது போல அந்த விளம்பரம் உள்ளது. ஏப்ரல் வரைதான் என எழுதி தங்களது கட்சிக்கும், தலைவருக்கும் கட்சிக்காரர்களே முடிவுரை எழுதிட்டாங்க போல என பலரும் கமென்ட் அடிப்பதோடு, ‘‘என்ன புரோ…இப்படி பண்ணீட்டீங்களே’’ என கிண்டல் செய்கின்றனர்.
