×

‘ஜன நாயகன்’ படத்தில் முக்கிய காட்சிகள் நீக்கம்: இந்த மாதம் ரிலீஸ் ஆகுமா?

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜன நாயகன்’. அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் சென்சார் சான்றிதழ் மறுப்பு மற்றும் நீதிமன்ற வழக்கு காரணமாக இன்று வரை ரிலீசாகாமல் இருக்கிறது. சென்சார் குழுவை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி இப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக கிடைக்காததால், தற்போது அந்த வழக்கை தயாரிப்பு நிறுவனம் இன்று வாபஸ் பெறுகிறது. இந்நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படத்தை மறுதணிக்கைக்கு படக்குழு அனுப்பியுள்ளது. முன்பு சென்சார் குழு சொன்னபடி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டதாக தெரிகிறது. 10 பேர் கொண்ட இந்த தணிக்கை குழு படத்தை பார்த்து சான்றிதழ் வழங்க 2 வார காலம் ஆகும் என்பதால் படம் இந்த மாதம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags : Chennai ,H. Vinoth ,Vijay ,Bobby Deol ,Pooja Hegde ,Anirudh ,
× RELATED கலங்கரை விளக்கம்-திருமயிலை மெட்ரோ ரயில் சுரங்கம் பணி நிறைவு