- Alanganallur
- வண்டி
- கோவில்பாப்பாக்குடி சோனை கருப்பணசுவாமி கோவில் திருவிழா
- சங்கிலி கருப்பா
- புது விளாங்குடி
அலங்காநல்லூர், பிப். 10: அலங்காநல்லூர் அருகே கடந்த 5ம் தேதி கோவில்பாப்பாக்குடி சோணை கருப்பணசாமி கோயில் திருவிழாவினையொட்டி எருதுகட்டு விழா நடந்தது. இந்நிகழ்வின் போது, புது விளாங்குடி சங்கிலி கருப்பு (29)என்பவருக்கு மாடு குத்தியதில் வலது வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சங்கிலி கருப்பு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
