செல்போன் திருடியவர் சிக்கினார்

 

மதுரை, பிப். 10: செல்லூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் நரிமேடு பகுதியில் உள்ள ஒரு டிபன் சென்டரில் வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த பிப்.4ம் தேதி பணி முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார். பிரிட்ஜ் மீது தனது செல்போனிற்கு சார்ஜ் போட்டு விட்டு தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது செல்போன் மாயமாகி இருந்தது. இது குறித்து செல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அமலநாதன்(25) என்பவர் செல்போன் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: