×

குளத்தூர் அருகே பஸ்சில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் அபேஸ்

*பெண் உள்பட 4 பேர் கைது

குளத்தூர் : தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாடசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (36). இவர்களுக்கு விளாத்திகுளம் அருகே உள்ள கூத்தலூரணி கிராமத்தில் இருந்த நிலத்தை நேற்று முன்தினம் விற்பனை செய்து அதில் கிடைத்த ரூ.2 லட்சத்தை பெற்றுகொண்டு விளாத்திகுளத்தில் இருந்து அரசு பஸ்சில் வந்துள்ளார்.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், குளத்தூரையடுத்த வேடநத்தம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது மகேஸ்வரி பேக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம் அபேஸ் ஆனது தெரிய வந்தது.

உடனே குளத்தூர் கா வல்நிலையத்தில் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரென்னீஸ் தலைமையில் எஸ்ஐ வசந்தி மற்றும் போலீசார் விசு, பொன்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு பணத்தை அபேஸ் செய்த நபர்களை தேடினர். அப்போது குறுக்குச்சாலை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், நாகர்கோவில் பார்க்கிங்கால் பகுதியை சேர்ந்த துரை, அவரது மனைவி பேச்சி, தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ரஞ்சித்குமார், பரமன்குறிச்சி சீருடையார்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் என்பதும், பஸ்சில் மகேஸ்வரியிடம் ரூ.2 லட்சத்தை அவர்கள் அபேஸ் செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணம் அபேஸ் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த குளத்தூர் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Kulathur ,Matasamy ,Tutickudi Kvke ,Maheshwari ,Kothalurani ,Vlathikulam ,
× RELATED திமிரி அருகே விஏஓ அலுவலகத்தில்...