×

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டம்: டாஸ்மாக் கடைகள் இன்று 3 மணிநேரம் இயங்காது

 

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு இன்றைய தினம் 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் பணியாளர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது முதன்மையான கோரிக்கைகளான 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தொகுப்பூதிய முறையை ஒழித்துக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறுபவர்களுக்கு முறையான ஓய்வூதியச் சலுகைகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. இதில் கடந்த 5ம் தேதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால், அடுத்தகட்டமாக 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, இன்றைய தினம் காலை 12 மணி முதல் 3 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TASMAC trade ,TASMAC ,Chennai ,TASMAC trade unions' ,Egmore, Chennai ,
× RELATED ஒன்றிய பாஜ அரசை கண்டித்து பிப்.12ல் நாடு...