×

சொகுசு பஸ்சில் பயங்கர தீ

 

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு தனியார் சொகுசுபஸ் பயணிகளுடன் நேற்றிரவு புறப்பட்டது. விஜயவாடா அருகே காஞ்சிகச்செர்லா அடுத்த கேசராடோல்கேட்டில் இன்று அதிகாலை கடந்தது. அப்போது பஸ்சின் பின்புறத்தில் உள்ள இன்ஜினில் இருந்து புகை வந்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார். பயணிகளை கீழே இறங்குமாறு சத்தமிட்டார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து வேகமாக இறங்கினர்.

இறங்கிய சில நிமிடங்களில், தீ பஸ் முழுவதும் பரவி முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. உரிய நேரத்தில் டிரைவர் விடுத்த எச்சரிக்கையால் பஸ்சில் இருந்த 39 பயணிகளும் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirumala ,Hyderabad, Telangana ,Vijayawada, Andhra Pradesh ,Kesara ,Kanchikacherla ,Vijayawada ,
× RELATED குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட...