×

டேட்டா மலிவாக கிடைப்பதால் கேமில் நேரத்தை வீணாக்காதீர்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி ‘பரிக்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சி மூலம் கலந்துரையாடுகிறார். இந்த ஆண்டு 9வது பதிப்பான பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சி மூலம் நாடு முழுவதும் பதிவு செய்த 4.5 கோடி மாணவர்களுடன் பிரதமர் மோடி பேசியதாவது: கல்வியை ஒரு சுமையாக நினைக்கக் கூடாது. அனைவரும் முழு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். அரைகுறை கல்வி வெற்றியை உறுதி செய்யாது.

அதே போல, மதிப்பெண்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என்ன சொன்னாலும் அனைத்து ஆலோசனைகளையும் மனதில் கொண்டு, அது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே அதை வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நமது இலக்கு எட்டக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் எளிதில் அடையக் கூடியதாக இருக்கக் கூடாது. முதலில் மனதை கட்டுப்படுத்துங்கள், ஒருமுகப்படுத்துங்கள். இந்தியாவில் டேட்டா மலிவாக கிடைக்கிறது என்பதற்காக உங்களுக்கு பிடித்த கேமில் நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்க்கை என்பது தேர்வுகளைப் பற்றியது மட்டுமல்ல. கல்வி என்பது நமது வளர்ச்சிக்கு ஒரு ஊடகம் மட்டுமே. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

* இன்னும் 25 வயது இருக்கிறது
பிரதமர் மோடி கூறுகையில்,’ கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று எனது பிறந்தநாளில் ஒரு தலைவர் என்னை அழைத்தார். அவர், உங்களுக்கு 75 வயதாகிவிட்டது என்றார். நான், இல்லை, இன்னும் 25 வயது மீதம் இருக்கிறது என்று பதிலளித்தேன். கடந்ததை நான் எண்ணுவதில்லை. எஞ்சியிருப்பதையும் நான் எண்ணுகிறேன். அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: போனதை எண்ணி நேரத்தை வீணாக்காதீர்கள். எஞ்சியதை எப்படி வாழ்வது என்று சிந்தியுங்கள். இப்போது சொல்லுங்கள்’ என்றார்.

Tags : Modi ,New Delhi ,
× RELATED நீட்-பிஜி கட் ஆப் மதிப்பெண் குறைப்பு...