98.4 சதவீதம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கல்

தேனி, பிப்.3: பொது சுகாதார துறை மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இளம்பிள்ளை வாதத்தை தடுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணி கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக தேனி மாவட்டத்தில்  ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள்,   அரசு மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள்,  பேருந்து நிலையங்களில் 830 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இம்முகாம்களில் மாவட்ட அளவில் 1 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு பொதுச் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் 3 ஆயிரத்து 312 பேர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்  கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் நேற்று வரை மாவட்ட அளவில் மொத்தம் 1  லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகளில் ஒரு லட்சத்து 370 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.  இது 98.4 சதவீதமாகும்.

Related Stories: