- அத்தீரம்
- கர்தி சிதம்பரம்
- சென்னை விமான நிலையம்
- காங்கிரஸ்
- கார்த்தி சிதம்பரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா கூட்டணி
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று, காங்கிரஸ் கட்சி எம்பி கார்த்தி சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள்தான் உள்ளன. இதில், இந்தியா கூட்டணியில் எத்தனை கட்சிகள் உள்ளன என்பதை பார்த்து, அவர்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து, சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஒன்றுகூடி பேசி சுமுகத் தீர்வு காணப்படும். நாடாளுமன்றத்தில் வெளியிடப்படாத புத்தகத்தை வைத்து பேசக்கூடாது என்கின்றனர்.
அது, சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் வெளியிடுவதைப் போன்றதுதான். பாஜவினருக்கு சில உண்மைகள் கசக்கின்றன. இதனால் உண்மை வெளிவராமல் இருக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணிக்கு நாடெங்கிலும் காங்கிரஸ் கட்சிதான் தலைமை தாங்குகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமை தாங்குகிறது. இந்த இந்தியா கூட்டணியில்தான் நாங்களும் இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
