×

யாருமே சேர்த்துக்கல… ஐயோ பாவம் ஓபிஎஸ்: கோயில் கோயிலாக சுற்றுகிறார்

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடர்ச்சியாக 2 நாட்கள் சுவாமி தரிசனம் செய்தார் ஓபிஎஸ். முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்சை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கவில்லை. அதிமுகவில் சேர்த்துக் கொள்ளும்படி கெஞ்சிக் கூத்தாடி பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. இதற்கிடையில் அவருடைய ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கழண்டு வேறு கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இருந்த கொஞ்ச ஆதரவாளர்களும் வேறு கட்சிக்கு தாவியதால், அவருடைய குடும்பம் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தவிக்கிறார். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை ஓபிஎஸ், மிச்சம் மீதி இருக்கும் ஒரு சில ஆதரவாளர்களுடன் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டார். இரவில் கடற்கரையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஓய்வெடுத்தார். நேற்று 2வது நாளாக தனது 2 சகோதரிகள், சகோதரர் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கோயிலில் மூலவர் அபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்டார்.

திருச்செந்தூர் கோயிலுக்கு எப்பொழுது வந்தாலும் ஓபிஎஸ், அன்றைய அரசியல் நிலை குறித்து பேட்டி கொடுப்பார். மேலும் நிருபர்கள் மற்றும் பக்தர்களிடமும் கலகலவென சிரித்து பேசி நலம் விசாரிப்பார். ஆனால், 2 நாட்கள் தரிசனம் முடிந்து சென்ற ஓபிஎஸ் நிருபர்களுக்கு வணக்கம் வைத்ததோடு சரி. வாய் திறக்கவில்லை. ஆனாலும், நிருபர்கள் தொடர்ந்து கேள்வி கேட்கவே, கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று ஒரு வாக்கியத்தை உதிர்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

Tags : Tiruchendur ,Swami ,Murugan Temple ,OPS ,National Democratic Coalition ,Kenchik ,
× RELATED விருதுநகரில் நாளை நடைபெறும் இளைஞரணி...