×

பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் பணியை கட்சி நிர்வாகிகள் தொடங்கினர்

 

துரைப்பாக்கம்: தமிழக வெற்றி கழகம் சார்பில், பனையூர், 8வது அவென்யூவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை தவெக பொது செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக, தவெக சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில், என்னென்ன பயனுள்ள அம்சங்களை சேர்க்கலாம் என்பதை மக்களிடம் இருந்து கருத்துகளை அறிவதற்கு, தவெக சார்பில் புதிய இணையதள பக்கத்தை நேற்று தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார்.

இதில் பலர் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இவற்றை தவெக தேர்தல் பணி குழுவினர் முழுமையாக ஆய்வு செய்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் முமுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனுக்கள் இன்று முதல் வரும் 14ம் தேதிவரை வழங்கப்படுகிறது. இதில் பொது தொகுதியில் போட்டியிடுபவருக்கு ரூ.10 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் என விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஏராளமான ஆண்களும் பெண்களும் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் வாங்கி, அவற்றை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, உரிய கட்டணங்களுடன் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.

Tags : Banayur Daweka ,Head ,Office ,Dharippakkam ,Tamil Nadu Victory Corporation ,General Secretary ,Pussi Anand Aadav Arjug ,8th Avenue ,Banaiur ,Banaiur Na ,K. A. Sengkottaiyan ,
× RELATED விருதுநகரில் நாளை நடைபெறும் இளைஞரணி...