×

விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய அமைச்சர்

 

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அறிவுரார் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்(54). செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். வேலையை முடித்து விட்டு நேற்று இரவு 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது, அண்ணாசாலையில் ஸ்டேட் வங்கி அருகே குறுக்கே வந்த நாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ரமேஷ் தலையில் பலத்த காயமடைந்து ரோட்டில் மயங்கி கிடந்தார். அப்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அவ்வழியாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் காரில் சென்றார்.

அப்போது ரமேஷ் காயமடைந்து ரோட்டில் கிடந்ததை பார்த்த அமைச்சர், உடனே காரை நிறுத்தி இறங்கினார். பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், சாலையில் சிதறிக்கிடந்த ரமேஷின் பையை கண்டெடுத்த இளைஞர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ சரவணன் மற்றும் காவலர் தினேஷ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அதில், இருந்த ரூ.2.5 லட்சம் பணத்தை காயம் அடைந்த ரமேஷ் மனைவி ஜெயந்தியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : Minister ,Ponnamaravathi ,Ramesh ,Arivarar Road, Ponnamaravathi, Pudukkottai district ,State Bank ,Anna Salai… ,
× RELATED சென்னை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு!