×

தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவ கோரி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை!!

மதுரை: தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவ கோரி தொடர்ந்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கும்பகோணம் வல்லம் ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த இடைக்கால தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்த கும்பகோணத்தை சேர்ந்த பத்ரி நாராயணன் என்பவருக்கு ஐகோர்ட் கிளை ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவ கோரி தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது .

கோயிலின் ஸ்தபதியின் அறிவுறுத்தலின் பேரிலேயே நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது. கோயிலில் வடகலை முறைதான் பின்பற்றப்பட்டது என்பதை உறுதி செய்ய போதிய ஆவணங்கள் தரவில்லை என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. பிப்.8ல் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். பிரச்சனை குறித்து முறையாக அதிகாரிகளுக்கு மனு தராமல் மனுதாரர் நேரடியாக வழக்கு தொடர்ந்துள்ளார் என நீதிபதி தெரிவித்தார்.

Tags : High Court ,Thenkalai ,Vadakalai ,Madurai ,Kudamuzhakai ,Vallam Sri Narasinghe Perumal Temple ,Kumbakonam ,
× RELATED சென்னை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு!