- ஐஐடி சென்னை
- ஐ.நா.
- பலராமன் ரவீந்திரன்
- செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவியல் குழு
- ஐக்கிய நாடுகள்
- பொது செயலாளர்
- அன்டோனியோ குடரெஸ்
- அறிவியல் குழு
ஐநா: செயற்கை நுண்ணறிவுக்கான அறிவியல் குழுவில் பணியாற்ற ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் ஐநா பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “செயற்கை நுண்ணறிவுக்கான புதிய சுயாதீன அறிவியல் குழுவில் பணியாற்ற 40 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பலராமன் ரவீந்திரன், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறை, வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் அன்ட் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், ராபர்ட் போஷ் டேட்டா சயின்ஸ் அன்ட் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மட்ராஸ்ஐ பொறுப்பு மையம் ஆகியவற்றின் தலைவர் ஆவார். பலராமன் ரவீந்திரன் தனது முனைவர் பட்டத்தை அம்ஹெர்ஸ்டில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்திலும், முதுகலை பட்டத்தை பெங்ளூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திலும் முடித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
