×

மொராக்கோவில் கனமழை: பலி 40 ஆக உயர்வு

 

மொராக்கோ: மொராக்கோவில் கடந்த சில வாரமாக கனமழை மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கசார், எல்கெபிர் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. லூக்கோஸ் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. சிடி ஸ்லிமானே மாகாணத்தின் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சார், எல்-கெபிர் நகரில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்டு வறட்சிக்கு பிறகு பெய்துள்ள இந்த கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : MOROCCO ,Khazar ,Elkebir ,Lucas River ,
× RELATED ஆஸி.யில் நடுக்கடலில் தத்தளித்த...