×

லீக் கோப்பை கால்பந்து சளைக்காத மேன்சிட்டி சரண்டரான நியூகேசல்

மான்செஸ்டர்: இங்லீஸ் லீக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று, மேன் சிட்டி அணி, 3-1 என்ற கோல் கணக்கில் நியூகேசல் அணியை அபாரமாக வென்றது. இங்லீஸ் கோப்பை லீக் கால்பந்து போட்டிகள் மான்செஸ்டர் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒரு போட்டியில் பலம் வாய்ந்த மேன் சிட்டி அணியும், நியூகேசல் அணியும் மோதின. போட்டியின் துவக்கம் முதல் மேன்சிட்டி அணி வீரர்கள் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர்.

அதற்கு பலனாக, அந்த அணியின் ஓமர் மர்மோஷ், போட்டியின் 7 மற்றும் 29வது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு அணியை பலப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மேன் சிட்டி அணியின் டிஜானி ரெஜிண்டர்ஸ் 32வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு 3-0 என்ற கணக்கில் முன்னேறச் செய்தார்.

போட்டியின் 2வது பாதியில் நியூகேசல் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி கோல் போடுவதில் தீவிரம் காட்டினர். 62வது நிமிடத்தில் நியூகேசல் அணியின் ஆன்டனி எலங்கா அட்டகாசமாக ஒரு கோல் போட்டார். அதன் பின் கடைசி வரை வேறு கோல்கள் விழவில்லை. அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் மேன் சிட்டி அணி அபார வெற்றி பெற்றது.

Tags : Manchester ,Manchester City ,Newcastle ,English League Cup ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி:...