×

ரூ.4.06 லட்சம் கோடிக்கு தாக்கல் மேற்குவங்க பட்ஜெட்டில் அரசுஊழியர்களுக்கு சலுகை: பெண்கள், இளைஞர்களுக்கு நிதி உதவி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால் நேற்று ரூ.4.06 லட்சம் கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்தார். அதில் தற்போது ரூ.1000 நிதி உதவி பெறும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையற்றோருக்கு வேலை கிடைக்கும் வரை அல்லது 5 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : KOLKATA ,MINISTER ,CHANDRIMA BHATACHARYA ,WESTERN STATE ,
× RELATED எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள்...