- காங்கிரஸ்
- மேற்கு வங்கம்
- புது தில்லி
- மல்லிகார்ஜுன் கார்கே
- தில்லி
- மக்களவை
- ராகுல் காந்தி
- பொதுச்செயலர்
- கேசி வேணுகோபால்
புதுடெல்லி: மேற்கு வங்க தேர்தல் பற்றி விவாதிப்பதற்காக அந்த மாநிலத்தை சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் குலாம் அகமது கூறுகையில், ‘வருகிற தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய தேர்தலில் கட்சி கூட்டணி சேர்ந்ததால் கட்சி தொண்டர்களிடையே மன சோர்வை ஏற்படுத்தியுள்ளது’ என்றார். கடந்த 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் உடன் போட்டியிட்ட காங்கிரசுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
