×

குடைகளுக்கான இறக்குமதி விலை ரூ.100 நிர்ணயம்

புதுடெல்லி: வௌிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக முடிக்கப்பட்ட குடைகளின் இறக்குமதிக்கு ஒரு குடைக்கு குறைந்தபட்சம் ரூ.100 என்ற விலையை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த விலைக்கு குறைவான குடைகளின் இறக்குமதிகள் இலவசம் என்ற நிலையில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.

அதாவது, ரூ.100 விலைக்கு குறைவான குடைகளை இனி இறக்குமதி செய்ய முடியாது. இந்த கட்டுப்பாடுகள் முன்கூட்டிய அங்கீகாரம் பெற்ற, ஏற்றுமதி சார்நத அலகுகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தாது. மேலும், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 பட்ஜெட்டில், குடைகள் மீதான இறக்குமதி வரி ஒரு குடைக்கு ரூ.60(20%) உயர்த்தி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : New Delhi ,Directorate of Foreign Trade ,
× RELATED எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள்...