×

டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை யுபிஎஸ்சி அணுகலாம் : தலைமை நீதிபதி அமர்வு அதிரடி

டெல்லி : டி.ஜி.பி பதவிகளுக்கு குறித்த நேரத்தில் பெயர்களை முன்மொழியாத விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை யுபிஎஸ்சி அணுகலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில டிஜிபி பரிந்துரை தொடர்பான வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி அமர்வு இவ்வாறு ஆணையிட்டுள்ளது. டிஜிபி பதவிக்கு உரிய நேரத்தில் பெயர்களை பரிந்துரைக்க மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத யுபிஎஸ்சிக்கு அதிகாரம் வழங்கிய உச்சநீதிமன்றம், பெயர்களை பரிந்துரைக்காத மாநிலங்களிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

Tags : UPSC ,Supreme Court ,DGP ,Delhi ,Telangana ,
× RELATED சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில்...