டெல்லி : பழுதுடன் எவ்வாறு போயிங் விமானம் லண்டனில் இருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டது என்று ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எரிபொருள் சுவிட்ச் பழுதான நிலையிலேயே பெங்களூரு வந்தடைந்தது. பயணத்தின்போது 2 முறை எரிபொருள் சுவிட்ச் பழுதடைந்ததால் ஏர் இந்தியா விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பிரிட்டன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
