×

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பிப்.5: பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை பேச அனுமதிக்காமல் 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த ஒன்றிய அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் தலைமை வகித்தார்.

கிழக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியை பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.  இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மாவட்டத் துணைத் தலைவர்கள் ரகுமான் முகமது அலியார், மாமன்ற உறுப்பினர் பாரதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Congress ,Dindigul ,Dindigul District Congress Committee ,Union government ,Opposition Leader ,Rahul Gandhi ,Dindigul Clock Tower ,Metropolitan District… ,
× RELATED வார இறுதி நாட்களையொட்டி 725 சிறப்பு...