பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கிறது. இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கிறது. எங்களது கூட்டணி வலுவாகிக்கிட்டே இருக்கிறது. அண்ணாலை தொகுதி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியது உட்கட்சி பூசலா என்று கேட்கிறீர்கள். இது, சட்டமன்ற பொறுப்பு கிடையாது. இது தேர்தல் வரைக்குமானது. அது நிரந்தரமான பொறுப்பு கிடையாது. எல்லோருக்கும் ஒவ்வொரு பொறுப்பு கொடுப்போம். 4 தொகுதி, 5 தொகுதி பொறுப்பு கொடுத்திருப்போம். ஜெயலலிதா இருக்கும்போது எனக்கு 5 மாவட்டம் கொடுத்தாங்க. அண்ணாமலை ஒண்ணும் சொல்லவில்லை. அவருடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அடுத்த முறை நான் எல்லா நிகழ்ச்சிக்கும் போறேன்னு சொன்னாரு. இது ஒரு சின்ன விஷயம். ஓ.பன்னீர்செல்வம் எங்களது அணியில் சேருவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
