×

பட்ஜெட்டில் அள்ளி அள்ளி கொடுத்து இருக்கோம்: சிரிக்காமல் சொல்லும் நடிகை குஷ்பு

சென்னை விமான நிலையத்தில் பாஜ மாநில துணை தலைவர் நடிகை குஷ்பு, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையானவற்றை அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை பார்க்கும் போது, தமிழகத்திற்கு உள்கட்டமைப்பு மேம்படுத்த எவ்வளவு தந்து உள்ளார்கள், என்பதை பட்ஜெட்டை படித்ததால் தெரியும். பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி, நேரத்தை விரையம் செய்யாமல், முக்கிய விசயங்களை பேச வேண்டும். தேர்தலில் எனக்கென்று எந்த திட்டமும் இல்லை. கட்சி என்ன வேலை தருகிறதோ அதை செய்வேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்காக வேலை செய்வேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது முக்கியம் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பாடுவேன். அண்ணாமலை ராஜினாமா செய்யவில்லை, அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று எஸ்.வி.சேகர் விமர்சனத்திற்கு, நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* விஜய் ஒரு டான்சர்
‘விஜய் இப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். அதே நேரத்தில், விஜய் தலைவராக இருந்தாலும், நடிகர், டான்ஸர் என்று தான் மக்கள் பார்க்கின்றனர். அவர் டான்ஸ் ஆடுவது அவரது தனிப்பட்ட கருத்து’ என்றார்.

* சேலத்துக்கு 14ம் தேதி அமித்ஷா வருகை?
சேலம் மாவட்டம் ஓமலூர் அல்லது சேலத்தில் வரும் 14ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடத்த தமிழக பாஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், ஓமலூர் அருகே விமான நிலையம் முன்பு உள்ள காலி இடத்தை, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

* சொன்னாரு..! செஞ்சாரு…! ரூ.4000 கொரோனா நிவாரண நிதி: முதல் தவணை ரூ.4,15,339 கோடி; 2ம் தவணை ரூ.4,19,638 கோடி; மளிகை பொருட்கள் ரூ.844 கோடி
சொன்னாரு: கொரோனா பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஆட்சிக்கு வந்தவுடன் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2.07 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.4000 வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். செஞ்சாரு: தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலமாக அரிசி அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை இரண்டு கட்டங்களாக வழங்க முடிவெடுக்கப்பட்டன. அதன்படி, 2,07,67,000 குடும்பம் அட்டைதாரர்களுக்கு மே.10ம் தேதி முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டன. 2ம் தவணை 2021ம் ஆண்டு ஜூன். 3ம் தேதி ரூ.2000 வழங்கப்பட்டன.

இந்த தொகையுடன் கோதுமை, ரவை, உப்பு, சர்க்கரை, உளுத்தம்பருப்பு, புளி, கடலை பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேயிலை தூள், குளியல் சோப்பு உள்ளிட்ட 14 மளிகை பொருட்களை வழங்கப்பட்டன. மேலும், புதிய ரேஷன் அட்டை வாங்கிய 2,14,950 பேருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. முதல் தவணையில் 98.4% பேருக்கும், இரண்டாவது தவணையில் 99% பேருக்கும் நிவாரண உதவி சென்று சேர்ந்தன. தமிழக முகாம்களில் வசிக்கக்கூடிய 13,553 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டன. ரேஷன் கார்டு அல்லது அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டன.

Tags : Khushbu ,BJP ,vice president ,Chennai airport ,Tamil Nadu ,India ,
× RELATED தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய...