- Velumani
- நைனார்
- செங்கோட்டையன்
- விஜய்
- தவெகா
- வெள்ளங்கோவில்
- கோபி?. திருக்குறள்
- ஈரோடு மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாங்கோவிலில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இதில், கலந்து கொண்ட செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “விஜய் எதிர்காலம் பிரகாசமாக மாறி கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 234 தொகுதிகளிலும் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவர்தான் எம்எல்ஏ என்ற வரலாறு படைப்பார்” என்றார். கரூர் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்ததால்தான் நடிகரின் கட்சி இன்று இருக்கிறது என எஸ்.பி.வேலுமணி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, ‘‘எடப்பாடி பழனிசாமி என்ன சிபிஐ அதிகாரியா?, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
எடப்பாடி குரல் கொடுப்பதால் என்ன பயன்? சிபிஐ விசாரணை இல்லாமல் போய்விடுமா?. 2 முறை சிபிஐ அலுவலகம் சென்று தனது விளக்கத்தை விஜய் அளித்துள்ளார்’’ என்றார். ‘‘தேர்தலில் போட்டியிட எப்போது விருப்ப மனு அளிப்பீர்கள்?’’ என்ற கேள்விக்கு, ‘‘வருகிற 6ம் தேதி கட்சியில் விருப்ப மனு அளிக்க உள்ளேன்’’ என்றார். முருகன் பக்தி பாடலுக்கு விஜய் ஆடியது குறித்த கேள்விக்கு, ‘‘யார் மனதையும் புண்படுத்தும் வகையில் அது இல்லை. சலங்கை கட்டி எஸ்.பி. வேலுமணி ஆடவில்லையா?, நயினார் நாகேந்திரன் ஆடவில்லையா? ஆடிக்கொண்டிருப்பவர்களை ஆட வேண்டாம் என்கிறீர்கள், ஆடாதவர்களே ஆடிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.
* அதிமுகவுல இணைய தோப்புக்கரணம் போடுறாங்க…
கோபி அருகே தவெக கட்சி அலுவலத்தை திறந்து வைத்து செங்கோட்டையன் பேசும்போது, ‘‘50 ஆண்டு கால அரசியலில் 1 நிமிடத்தில் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். கட்சியில் அனைவரும் இணைய வேண்டும் என்று சொன்னேன். இப்போது அனைவரும் இணைய தோப்புக்கரணம் போட்டுக் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரையும் இணைக்க கெஞ்சிக் கொண்டு உள்ளனர். இணைய வேண்டும் என சொன்னதற்காக எனக்கு எதற்கு தண்டனை?. எத்தனை கூட்டணி வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக-தவெகவுக்கு மட்டுமே போட்டி இருக்கும். பாஜவுடன் உள்ள 10 கட்சி கூட்டணியை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அந்த நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது’’ என பேசினார்.
* தவெக ஸ்டிராங்கா இல்ல…
பட்ஜெட் பற்றிய கேள்விக்கு, ‘‘புதிதாக தொடங்கிய இயக்கம் இன்னும் வலுப்படுத்த வேண்டி உள்ளது. கட்சி ஆளும்போதுதான் கருத்துக்களை தெரிவிக்க முடியும்’’ என செங்கோட்டையன் தெரிவித்தார்.
